19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க ஜனாதிபதிக்கு இணக்கமில்லை – முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, August 11th, 2020

19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது அவ்வளவு சுலபமாக விடயமல்ல என்றும் அது நீக்கப்பட்டாலும் பிரச்சினைகள் நீடிக்கும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

இதன்காரணமாகவே 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இணக்கமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இது தொடர்பில் தெரிவித்துள்ள பஸில் ராஜபக்ச மேலும் தெரிவிக்கையில் –

18ஆவது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி பதவியின் ஆயுட்காலம் நீடிக்கப்படுவது குறித்து பொதுமக்களிடையே சற்று எதிர்ப்பு உள்ளது. அதேபோல 19 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்வதற்கும் மக்களிடையே விசனம் இருக்கின்றது.

இதற்காக அரசாங்கம் ஆலோசனை நடத்திவருவதோடு மாற்று வழியாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதே சிறந்த விடயமாகக் கருதமுடியும் என்றும் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன் அதன் பின்னரே 19 ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: