19ஆம் நூற்றாண்டு அரச வாள் ஜனாதிபதி மைத்திரிக்கு ரஷ்ய ஜனாதிபதி அன்பளிப்பு!

Saturday, March 25th, 2017

ரஷ்யாவுக்கான மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு மிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் பின்னர் சந்திப்பின் விசேட நினைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய ஜனாதிபதி சிறப்பு பரிசொன்றை வழங்கியுள்ளார்.

19 ஆவது நூற்றாண்டுக்குரிய கண்டிய யுகத்தின் அரச வாள் விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. 1906 ஆண்டளவில் பிரித்தானியாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட இந்த வாள் பிரித்தானியாவில் நடைபெற்ற Sotheby எனப்படும் புராதனப் பொருட்கள் ஏல விற்பனையில் ரஷ்யாவினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இருநாடுகளுக்குமிடையிலான நெருங்கிய உறவின் அடையாளமாக இந்த புராதன வாள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் இலங்கை ஜனாதிபதிக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

Related posts: