188 கட்டமைப்புகளில் 94 செயலிழந்துள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை – தொடருந்து திணைக்களம் தெரிவிப்பு!
Friday, September 1st, 2023தொடருந்து கடவைகளில் மின் சமிக்ஞைகளை நிறுவும் திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்ட 188 கட்டமைப்புகளில் 94 செயலிழந்துள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி, தொடருந்து சமிக்ஞை மற்றும் மின் பொறியியலாளர் சிந்தக ஜயசேகர தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்காரணமாகவே, சமிக்ஞை கட்டமைப்புகளில், சில பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
சிலர் இந்த வருடத்தில் பொருத்தப்பட்ட கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தனர்.
எனினும் இந்த வருடத்தில் எந்தவொரு சமிக்ஞை கட்டமைப்புகளும் பொருத்தப்படவில்லை என சிந்தக ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீரற்ற காலநிலை தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம்
தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிக நடவடிக்கை – திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப...
நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க த...
|
|