182 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு – ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு!

Sunday, June 9th, 2024

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்த அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

189 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 182 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

000

Related posts: