18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த ஆலோசனை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனதெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021

18 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இதுதொடர்பான பரிந்துரைகள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சினோவெக் மற்றும் பைஸர் ஆகிய தடுப்பூசிகள் சில நாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதனை இலங்கையிலும் அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: