18 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – தடுமாறும் வல்லாதிக்க நாடுகள்!

Monday, April 13th, 2020

சர்வதேச ரீதியில் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114,175 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,851,578 பேராக பதிவாகியுள்ளதோடு அவர்களில் 404,616 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் அமெரிக்காவில் அதிகளவான மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அங்கு 1,524 பேர் நேற்று உயிரிழந்துள்ளதோடு, மொத்தமாக இதுவரையில் 27 ஆயிரத்து 367 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: