175 பேருந்துகளுக்காக சுமார் 300 மில்லியன் ரூபா செலவு – சேவையில் இருந்து நீக்கப்பட்ட பேருந்துகள் திருத்தப்பட்டு மீண்டும் இணைப்பு!

Wednesday, July 26th, 2023

சேவையில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 175 பேருந்துகள் திருத்தப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக உதிரி பாகங்கள் பற்ராக்குறை மற்றும் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக சேவையில் இருந்து நீக்கக்ப்பட்ட பேருந்துகளே இவ்வாறு திறுத்தப்பட்டுள்ளன.

மூன்று வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபடுத்தப்படாத 852 பேருந்துகளில் 400 பேருந்துகளை சீர்செய்யும் திட்டமொன்று பொது திறைசேரி ஏற்பாட்டில் டிப்போ மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட 175 பேருந்துகளுக்காக சுமார் 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிநுட்பப் பிரிவின் பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப நிபுணர்களின் பங்களிப்புடன் குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த 175 பேருந்துகளில் 15 பேருந்துகள்  பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் “சிசு செரிய” திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதுடன் ஏனைய பேருந்துகள் பயணிகள் போக்குவரத்துத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக அந்தந்த டிப்போக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

குளித்துவிட்டு வெளியேறியபோது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது - சம்பவங்கள் தொடர்பாக கருத்து வெளி...
பொது சுகாதார விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எச்சரிக்கை!
ஒமிக்ரோன் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் - மக்களே அவதானம் என எச்சரி...