17 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிப்பு!

Tuesday, August 1st, 2017

நாட்டில்  17 மாவட்டங்கள் வறட்சியால் கடுமையான நெருக்கடிக்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் மூன்று இலட்சம் குடும்பங்களை சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வறட்சியால் வட.மாகாணம் கூடுதலான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 462,815 மக்கள் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். வட மாகாணத்தை அடுத்து கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

Related posts: