17 ஆம் திகதி வரை 04 பாடசாலைகளுக்கு விடுமுறை!

Friday, January 4th, 2019

2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின், விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள 04 பாடசாலைகள், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு இசிபத்தனா, மாத்தறை மஹானாம, குருநாகல் சீ.டயிள்யு.டயிள்யு கன்னங்கர மற்றும் கண்டி புனித மரியாள் கல்லூரி ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

அத்துடன், மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெற்றுவரும் 22 பாடசாலைகளில் ,சில பாடசாலைகள் மூடப்பட்டிருக்குமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: