16 வாரங்களின் பின்னர் நாளொன்றில் ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு!

Tuesday, September 28th, 2021

நாட்டில் 112 நாட்களின் பின்னர் நாளொன்றில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 812 பேர் கொரோனாத்தொற்றி லிருந்து குணமடைந்துள்ளனர்.

அதனடிப்படையில் இது வரை 4 இலட்சத்து 55 ஆயிரத்து 344 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந் துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

00

Related posts: