16 வயது வரை சிறுவர்கள் பாடசாலை செல்வது கட்டாயம் !

இலங்கையில் 5 வயதுக்கும், 16 வயதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வது கட்டாயமாக்கப்படவுள்ளது. ஏற்கனவே, 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றிருந்த கட்டளை, தற்போது, 16 வயது வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 வயதுக்கும், 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பத் தவறும் பெற்றோருக்கு தண்டனை விதிக்கப்படவுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
இதன்படி மாணவர்களின் வருகையை ஒழுங்காக கண்காணிக்கும் பொறிமுறை, பாடசாலைகள் மட்டத்தில் இருந்து வலயக் கல்வி பணியக மட்டம் வரையான பொறிமுறையும் உருவாக்கப்படவுள்ளது.
1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 5 வயதுக்கும், 4 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|