15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை!

Friday, February 26th, 2021

இலங்கையர்கள் அனைவரது தரவுகளும் உள்ளடக்கப்பட்ட இலத்திரனியல் சிப் கொண்ட அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டையை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் 15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இந்த அடையாள அட்டையை வெளியிடுவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

உலகளாவிய ரீதியில் பல நாடுகள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை, தங்கள் நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: