147 புதிய கைத்தொழில்கள் ஆரம்பிக்க நடவடிக்கை – கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021

புதிய கைத்தொழில்களை ஆரம்பிக்க 5000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 10 மாதங்களில் 91 புதிய கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 4000 மில்லியன் ரூபா நேரடி முதலீடு செய்யப்படுகிறது. புதிய கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக தெரிவித்த கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச அந்தவகையில் நிதி அமைச்சரினால் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –

சில நாடுகள் தமது நாடுகளில் சினிமா துறையை கைத்தொழிலாக அங்கீகரிக்கவில்லை. அவ்வாறு அங்கீகரிக்காவிட்டால் யுனெஸ்கோ உதவிகள் கிடைப்பதில்லை. நாம் சினிமா துறையை கைத்தொழிலாக அங்கீகரித்துள்ளோம்.

முதலீட்டாளர்கள் இங்கு முதலிட வந்தால் பல இடங்களில் சுற்றித்திரிந்து திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. புதிய கைத்தொழில்களை பெற காணி கோரியுள்ளனர்.

இந்நிலையில் திருகோணமலை, வெலிகம உட்பட பல கைத்தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் 91 புதிய கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 4000 மில்லியன் ரூபா நேரடி முதலீடு செய்யப்படுவதோடு 8042 தொழில்வாய்ப்புகள் உருவாகும். இந்த வருடத்தில் 147 புதிய கைத்தொழில்கள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் இந்த வருடம் 950 மெற்றிக் தொன் கடதாசி உற்பத்தி செய்யப்பட்டது. பழைய இரும்பிற்கு விற்க இருந்த தொழிற்சாலையின் வாயிலாக இன்று பயன் கிடைத்து வருகிறது என்றும் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: