136 ஆண்டுகளில் கடந்த பிப்ரவரி மாதம் தான் அதிகளவு வெப்பம் பதிவானது – நாசா தகவல்

Thursday, March 24th, 2016

கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த மாதம் தான் அதிகளவு வெப்பம் பதிவானதாக

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனம்

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானதாகவும்இ

அது பெப்ரவரி மாதத்தில் 1.35 டிகிரி செல்சியசாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அளவானது கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும் போதுஇ பிப்ரவரி

மாதத்தில் பதிவான அதிகளவு வெப்பநிலை என நாசா தெரிவித்துள்ளது.

அது மனிதர்களால் வெளியான அசுத்த வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு

புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும்இ எல் நினோ காரணமாக இந்த பருவநிலை மாறுபாடு

ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

1880ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வெப்ப நிலை மாற்றம்இ மழை அளவு உள்ளிட்டவை பதிவு

செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: