13, 374 வாக்களிப்பு நிலையங்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்!

Friday, February 9th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு  காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. இதற்காக 13, 374 வாக்களிப்பு  நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

340 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு 8325 மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்வதற்காக வாக்களிப்பிற்கான அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் தமது ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறுதேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: