13 ஆவது திருத்தமே அரசியல் தீர்வுக்கு வழி: பாரதப் பிரதமரிடம் வலியுறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பு!

Sunday, June 9th, 2019

13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிநிதிகளான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தியதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் இதுவே நடைமுறைச் சாத்தியமான தீர்வு என்றும் இதை முழுமையாக நடைமுறைப்படுத்தி படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு தமிழ் தரப்பினர் முன்னேற வேண்டும் என்றும் கடந்த 30 வருடங்களாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாரதப் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு கூறிவந்த பதிய அரசியல் அமைப்பு ஒன்றின் ஊடாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பாக எவ்வித கருத்தக்களையும் முன்வைக்கவில்லை என்றும் தெரிய வருகின்றது.

Related posts: