13 ஆவது திருத்தச்சட்டத்தின் அத்திவாரமிட்ட பெருமை பொன் சிவகுமாரனையே சாரும் –  பிரபல சட்டத்தரணி முடியப்பு றெமீடியஸ்!

Tuesday, June 5th, 2018

கட்சி பேதங்களில்லாது எல்லோராலும் மதிக்கப்படக் கூடியவாராக இருப்பவர் பொன்.சிவகுமாரன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

உரும்பிராயில் நடைபெற்ற பொன் சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவுதினம் மற்றும் விடுதலை வித்துக்கள் தினமும் ஒருங்கே கடைப்பிடிக்கப்பட்ட இன்றையதினத்தில் உரையபற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தான் நேசித்த மக்களுக்காக தன் இன்னுயிரீந்துகொண்டவர் பொன் சிவகுமாரன் என்றும் அவரை மட்டுமே தமிழ் மக்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் அத்திவாரமிட்டபெருமை பொன் சிவகுமாரனையே சாரும். எம் இனத்தின் விடுதலைக்காக ஒரு சிறுதுளிகூட வியர்வை சிந்தாதவர்கள் இன்று பத்திரிகை வீணர்களாக செயற்பட்டு வருகின்றார்கள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

DSC_0058

IMG_20180605_163047 IMG_20180605_162453 IMG_20180605_162415


அடிப்படை தேவைகளை பெற்றுத்தருமாறு அரியாலை  முள்ளிக்கிராம மக்கள் ஈ.பி.டி.பியிடம் கோரிக்கை!
ஊனமுற்ற இராணுவத்தினருக்காக தற்போது மாதாந்தம் 65,000 ரூபா வரை செலவு!
முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு!
உரிய நேரத்திற்கு முன்னர் பயணம் : 1 கோடியே, 17 இலட்சம் ரூபாய் நஷ்டம்!
கல்வி அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் - வடக்கு கல்வி அமைச்...