12 இந்திய மீனவர்கள் கைது!

Sunday, March 26th, 2017

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 பேரில் 6 பேர் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், ஏனையவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்தியர்களிடம் இருந்து இரண்டு மீனவப் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: