11 ஆம் திகதி நாடாளுமன்றில் பெறுமதி சேர் வரித்திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு!

பெறுமதி சேர் வரித் திருத்த சட்டமூலம் (VAT) மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த 20 ஆம் திகதியே சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெறவிருந்தது. VAT வரி வீதத்தை அதிகரித்து தேசிய வருமான வரி ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருந்த உத்தரவினை இரத்து செய்யும் வகையில், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவினால் இந்த விவாதம் இரத்து செய்யப்பட்டிருந்தது.
11 வீதமாகக் காணப்பட்ட VAT வரியை கடந்த மே மாதம் 2 ஆம் திகதி முதல் 15 வீதமாக அதிகரித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், நாடாளுமன்ற அனுமதியின்றி இதனை செயற்படுத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
Related posts:
ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் - ஜன...
விசேட பண்ட - சேவை வரியினை நேரடியாக பெறுவதற்கு திறைசேரிக்கு அதிகாரம் - பணிகளை முன்னெடுக்க பிரதி செயலா...
டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரிப்பு - இதுவரை 24,523 பேர் பாதிப்பு என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் ப...
|
|