1000 ரூபா வேதனம் தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை!

Friday, September 25th, 2020

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா வேதனம் வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது நிலைப்பாடுகளை 2 வாரங்களில் அறிவிக்க வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்கள், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுக்கிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அமைச்சரினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது தீர்மானங்களை அறிவிக்காவிடத்து அரசாங்கம் தமது முடிவை அறிவிக்கும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டதாக இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

Related posts: