1000 ரூபா கொடுப்பனவு நடைமுறை விவகாரம் 5 ஆம் திகதிமுதல் நடைமுறையில் – தொழில் ஆணையாளர்!

Saturday, March 6th, 2021

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்ட 1000 ரூபா கொடுப்பனவை தோட்ட நிறுவனங்கள் இன்றுமுதல் வழங்க வேண்டும் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கான வர்த்தமானியை இரண்டு தினங்களுக்கு முன்னர் அரச அச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் நேற்று 5 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: