யாழ். கிளிநொச்சி மாவட்டங்களில் 33 பாடசாலைகள் 2950 மில்லியன் செலவில் அபிவிருத்தி! கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கும் நடவடிக்கை!
Sunday, November 8th, 20201000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தி அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படையில் யாழப்பாணத்தில் முதற்கட்டமாக 10 பாடசாலைகளும் 2 ஆம் கட்டமாக 16 பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு மொத்தமாக 33 பாடசாலைகள் 2950 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கிளநொச்சி மாவட்டத்தில் தற்போது 02 தேசிய பாடசாகைள் உள்ள நிலையல் முதல் கட்டத்தில் 02 பாடசாலைகளும் 2 கட்டத்தில் 6 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டு 10 பாடசாலைகளும் 900 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஒரு கல்வி வலயமாக காணப்படுகின்ற நிலையில் எதிர்கொள்ளப்படும் நிர்வாக சிக்கல் மற்றும் வளப் பங்கீட்டு சிக்கல்களையும் கருத்தில் கொண்டு குறித்த கல்வி வலயத்தினை இரண்டு வலயங்களாக பிரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமான கிராமிய சமூக கட்டமைப்பை அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில். விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பிரசன்னத்துடன் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததுடன் குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளநொச்சி மாவட்டங்களின் சமூக கட்டமைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|