1000 ஏக்கர் நிலப்பரப்பில் நீர் வாழ் உயிரின பூங்கா!

Wednesday, November 2nd, 2016

மன்னார் பிரதேசத்தில் நீர் வாழ் உயிரின உற்பத்திப் பூங்காவொன்று அமைக்கும் திட்டமொன்றறை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் 400 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த நீர் வாழ் உயிரின உற்பத்திப் பூங்கா மூலம் பத்தாயிரம் பேருக்கு தொழில்வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

455

Related posts: