100 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மெத்தனம் – யாழ்ப்பாணத்தில் சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை!

Saturday, April 10th, 2021

யாழ். மாநகரில் முடக்கப்பட்ட பகுதி விடுவிக்கப்பட்டு நேற்றுமுந்தினம்முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத 100 இற்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்.மாநகரம் முடக்கப்பட்டிருந்ததை அடுத்து நேற்று முன்தினம் 7 ஆம் திகதி முடக்கல் நீக்கப்பட்டு 75 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த மிகுதி வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தது.

திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் நேற்று சுகாதார பிரிவினர் நடத்திய சோதனையின்போது பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத 100ற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன் இன்று துரையப்பா விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைக்கு வருமாறும் அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: