10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு – அரிசி தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, January 18th, 2022

நாட்டில் எதிர்வரும் 10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு உள்ளதாகவும் இதனால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலிருந்து நெல் அறுவடை கிடைப்பதன் காரணமாக இந்த வாரம் அரிசி விலைகளில் குறைவு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது சந்தைகளில் அனைத்து ரக அரிசிகளின் விலையின் கட்டுப்பாட்டு விலை நீக்கத்திற்கு பின்பு வர்த்தகர்கள் விரும்பியவாறு விலையை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: