10 மணிநேர மின் துண்டிப்பு – இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளிப்பு!

இன்றையதினம், நாடளாவிய ரீதியில், சுழற்சி முறையில் 10 மணிநேரம் மின்துண்டிப்பை அமுலாக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வலய ரீதியாக, காலை 8 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில், 10 மணிநேர மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, A B C D E F வரையான வலயங்களில், பிற்பகல் 2 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில், 10 மணிநேரமும்,
G H I J K L வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல், பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில், 6 மணிநேரமும், மாலை 6 மணிமுதல், இரவு 10 மணிவரையான காலப்பகுதியில், 4 மணிநேரமும்,
P Q R S வரையான வலயங்களில், பிற்பகல் 2 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில், 10 மணிநேரமும்,
T U V W வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல், பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில், 6 மணிநேரமும்,
மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும்,
M N O X Y Z வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல், இரவு 10 மணிவரையான காலப்பகுதியில், 4 மணிநேரமும் மின்தடை அமுலாதக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|