10 மணித்தியாலத்தில் அவுஸ்திரேலியா செல்ல வாய்ப்பு!

Tuesday, May 30th, 2017

இலங்கைக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.மெல்பேர்ன் – கொழும்பிற்கு இடையிலான நேரடி பயணங்களுக்கு A330 – 300 ரக விமானம் பயன்படுத்தப்படவுள்ளது. மெல்பேர்னிற்காக ஸ்ரீலங்கன் விமான சேவையின் நாளாந்த பயணத்தின் போது ஒவ்வொரு முறையும் 283 பயணிகள் அழைத்து செல்லப்படவுள்ளனர்.

நேரடி சேவையின் மூலம் பத்து மணித்தியாலங்களில் இலங்கையிலிருந்து மெல்பேர்ன் செல்ல முடியும். இது குறித்து மெல்பேர்ன் விமான நிலைய அதிகாரி, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பயண முறையின் ஊடாக விக்டோரியாவில் வசிக்கும் இலங்கை நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்ப்பதற்காக அதிகமான இலங்கையர்கள் பயணிக்க கூடும் என் அவர் குறிப்பிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு மதிப்பீட்டிற்கமைய 50 சதவீதமான இலங்கையர்கள், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வாழ்வதாக தெரியவந்துள்ளது

Related posts: