10 கோடி ரூபா பெறுமதியான தங்கதுடன் ஒருவர் கைது!
Monday, March 27th, 2017இலங்கையிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 கோடி பெறுமதியான, 16.5 கிலோ தங்க கட்டிகளை கொண்டு சென்ற ஒருவரை, தமிழக பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்க கட்டிகள் ராமநாதபுரத்துக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவது தொடர்பாக அந்நாட்டு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்தே, 16.5 கிலோ தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தமிழக மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள்இணைந்து இராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் மற்றும் கிழக்கு கடற்கரைசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனைகளை நடத்திய நிலையில், கொரியர் வண்டியில் பதுக்கப்பட்டிருந்த சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் கடத்தல் தங்கம் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது மற்றும் குறித்த கடத்தல் பின்னணியில் இருப்பவர்கள் தொடர்பில், இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|