10 எண்ணெய் களஞ்சியங்கள் இலங்கைக்கு!

Wednesday, May 3rd, 2017

திருகோணமலையில், இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் கீழ் இருந்த 10 எண்ணெய் களஞ்சியங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் குறித்த இந்த எண்ணெய் களஞ்சியங்கள் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. அவற்றில் குறித்த 10 எண்ணெய் களஞ்சியங்கள் இலங்கை அரசாங்கத்தின் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவும் இலங்கையும் இணைந்து இந்த எண்ணெய் களஞ்சியங்களை பயன்படுத்துவதற்கான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: