10 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அதிபர்களிடம்!
Saturday, March 31st, 2018நாடு முழுவதும் உள்ள தேசிய பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 11 வரையான தரங்களுக்குப் பொறுப்பான 3 ஆயிரத்து 766 ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கடிதங்கள் அந்தந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பாடசாலைகளில் 10 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் இடமாற்றத்தின் மூன்றாவது கட்டமாக இது இடம்பெறுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் இரண்டாவது கட்டமாக 4 ஆயிரத்து 473 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், பல்வேறு காரணங்களுக்காக அந்த இடமாற்றங்களை ரத்துச் செய்ய ஆசிரியர் இடமாற்ற சபை தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச கூட்டுறவு தினம்
"பெரும் போகத்தை வெற்றி கொள்வோம்" – வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் -தேர்தல்கள் ஆணைக்குழு த...
|
|