PHI கெடுபிடி : உள்ளூர் உற்பத்திகள் முடக்கம் – உற்பத்தியார்கள் பெருங் கவலை!

யாழ்ப்பாணம் மற்றும் தீவகங்களில் PHI கெடுபிடியால் பல உள்ளூர் உற்பத்திகள் முடங்கி விட்டதாக பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் யாழ்ப்பாணம் , தீவகம் , மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் செய்யப்படுகின்ற உள்ளூர் உற்பத்திகளான பருத்தித்துறை வடை, முறுக்கு, எள்ளுப்பாகு , வேப்பம் பூ வடகம் போன்ற சிறு வாழ்வாதார உற்பத்திகளை சுகாதாரத்துடன் தான் காலா காலமாக செய்து வந்த நிலையில் அவர்களின் உற்பத்திகளால் யாருக்கும் எந்த நோயும் ஏற்பட்டதில்லை.
இந்நிலையில் PHI கெடுபிடியால் அவர்களின் உற்பத்திகள் குறைந்துள்ளதோடு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர்.
அவர்களிடம் சென்று நிலத்துக்கு மாபிள் போடு, , சுற்றிவர கண்ணாடி பிற்றிங் அடி, மேல சீற் போடு என்று சொன்னால் பாவம் அவர்கள் எங்கே போவார்கள் என பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சுகாதாரம் எனும் போர்வையில் தேவையற்ற அளவுக்கதிகமான கெடுபிடிகளால் உள்ளூர் உற்பத்திகள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் வடபகுதி மக்களின் கைத்தொழில் உற்பத்திகள் குறைந்த நிலையில் தென்னிலங்கையர்களின் உற்பத்திப்பொருட்களே அதிகமாக விற்பனையாவதாகவும் பலரும் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|