75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக வலிமைண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
Related posts:
அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கான கலந்துரையாடல்!
சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை - தமிழரசு மத்திய குழு அதிரடி நடவடிக்கை!
ஜனாதிபதியின் சிறப்புரிமைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானம்!.
|
|