600 வீரர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி!

Wednesday, January 29th, 2020


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் படை அதிகாரியின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சபார் மஹ்மூத் அப்பாசி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 600 பேருக்கு பாகிஸ்தானில் மேலதிக பயிற்சிகளை வழங்குவதாக படை அதிகாரியின் தலைமை அதிகாரி அப்பாசி தெரிவித்துள்ளார்.

இதன்போது இராணுவ மோதலின் போது பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டுவதாக பிரதமர் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலாவுக்காக இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தானுக்கு வருகை தந்தமைக்கு படை அதிகாரியில் தலைமை அதிகாரி நன்றி தெரிவித்தார்.

Related posts: