40 வருடகால நடைமுறையை மாற்றியமைத்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்: தனியாரின் அத்துமீறலை எதிர்த்து கல்வியங்காடு சந்தையில் போராட்டம்!

Tuesday, January 7th, 2020


யாழ். மாநகர சபையின் முதல்வர் ஆர்னோல்ட்டின் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்தும் குத்தகைகாரர்களின் செயற்பாடுகளைக் கண்டித்தும் யாழ். கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்மொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இண்மையில் பல குறைபாடகளுடன்  புதிதாக கட்டப்பட்ட கல்வியங்காடு பொதுச் சந்தை குத்தகையாளர்களிடம் மாநகரசபையால் வழங்கப்பட்டது.

சந்தையை பொறுப்பேற்ற குத்தகையாளர்கள் சந்தையின் சகாதாரத்தில் அக்கறை காட்டவில்லை. இதனால் குப்பைகள் அதிகரித்து துர்நாற்றங்கள் வீசுவதால் சந்தைப் பகுதியில் பொருள்களை வாங்குபவர்களுடன் வியாபாரிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது தற்போது வரி அறவீட்டை 2 மடங்காக வசூலிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.  இது போன்ற செயற்பாடுகளைக் கண்டித்தும், மீன் சந்தைக்கான பாதையை பெரிதாக மாற்றித்தருவதாகவும் இன்னும் சில விடயங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை யாழ். மாநகர சபை முதல்வர் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக  கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக புதிதாக சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் வெற்றுக்காணி ஒன்றில் தற்காலிகமாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இந்’நிலையில் முழுமையாக சந்தைத் தொகுதி சீரமைக்கப்படாத நிலையில் இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்தே சந்தை நடவடிக்கைகள் தொடங்கியிருந்தன.

இந்நிலையில் கடந்த காலங்களில் மாநகர சபையின் அமைய ஊழியர்களே இவ்வாறான சுகாதார செயற்பாடுகளை மேற்கொண்டு வந்திரந்தனர்.  கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தவந்த நடைமுறையை ஆர்னோல்ட் தனது சயநலத்துக்காகப அச்செயற்பாட்டைச் செய்ய தனியாருக்கு 15 வீத சலுகை வழங்கப்பட்டு சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்.

இந்த நிலைமையால் தனியார் தாம் நினைத்தவாறு சந்தையின் சுகாதாரத்தை மேற்கொள்ளவென கூறி வரியை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர். புதிய ஆண்டு ஆரம்பித்து குத்தகைக்கு எடுத்த ஒருவார காலத்திலேயே குத்தகைதாரர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால் வியாபாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: