4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் அல்ல : அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்!

Thursday, October 3rd, 2019


எதிர்வரும் 4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் அல்ல என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், 2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்பட வில்லை என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அவர்கள் அறிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி அரசாங்க விடுமுறை வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகி உள்ளது.

Related posts: