3 மாதங்களில் 100 குளங்கள் புனரமைக்கப்படும் – ஜனாதிபதி!

Sunday, September 1st, 2019


அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பேதங்களின்றி நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கந்தளாய் – மொரவௌ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உன்னத வாரலாற்றைக் கொண்டுள்ள எமது நாடு அன்று விவசாயத்துறையில் வளம்பெற்று விளங்கியது.

எதிர்காலத்திலும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விவசாயத்துறையை அடிப்படையாகக்கொள்ள வேண்டுமென்றும் காலநிலை மாற்றங்கள் சவாலாக இருந்தபோதும் புதிய திட்டங்களின் மூலம் அந்த சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்காக தான் முக்கிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி மாவட்டத்தின் விவசாய சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் வகையில் குளங்களை புனரமைப்பதற்காக விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டத்தில் 100 குளங்களை புனரமைக்கும் பணிகள் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் நிறைவடையுமென்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts: