28 ஆம் திகதி க.பொ.த சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை!

2019 கல்வி பொது தராதர சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 1,295 மத்திய நிலையங்களில் நடைபெறும் இப் பரீட்சையில் 174,778 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கான அனுமதிப்பத்திரம் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரிட்சார்த்திகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரீட்டை அனுமதிப் பத்திரத்தில் பாடத்திருத்தம், மொழியில் மாற்றம் அல்லது வேறு ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் உடனடியாக பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை பிரிவு மற்றும் பெறுபேறு கிழைக்கு சமர்ப்பித்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரசாங்கத்தினால் ஐந்து இலட்சம் மெற்ரிக் தொன் அரிசி இறக்குமதி!
குடாநாட்டில் 33000 தொழில் விண்ணப்பங்கள் !
சட்டங்களை மீறி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...
|
|