17 பேர் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் – மஹிந்த தேஷப்பிரிய!

Wednesday, October 2nd, 2019

ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்கள ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பப்படிவங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் 4 ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: