10 வீதத்தினால் செலவீனங்களை குறைக்குமாறு உத்தரவு!

Monday, October 7th, 2019


செலவீனங்களை 10 வீதத்தினால் குறைக்குமாறு திறைசேரி அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த செலவீனக் குறைப்பை மேற்கொள்ளுமாறு இந்த உத்தரவில் கேட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தேவையற்ற திட்டங்கள் மற்றும் வீணான செலவீனங்கள் என்பவற்றை நிறுத்துமாறு திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க அறிவித்துள்ளார்.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் தமது உடன்படிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும்.

அத்துடன் இந்த நிறுவனங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் சமய நிகழ்வுகளுக்கான நன்கொடைகள் வழங்கல் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்றும் சமரதுங்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts: