சங்கானை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை !

சங்கானை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாதமையால் நோயாளர்கள் பொரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சங்கானை மருத்துவமனைக்கு நாளாந்தம் ஏராளமான நோயாளர்கள் சிகிச்சைக்காகச் செல்கின்றனர். எனினும் அங்கு நான்கு மருத்துவர்கள் மட்டுமே கடமையில் உள்ளனர். இதனால் சிகிச்சைக்குச் செல்லும் நோயாளர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சைப் பெற வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. சிலர் சங்கானை மருத்துவ மனைக்கு செல்வதை விட அவர்களுக்கு எமது மருத்துவமனைக்கு போதுமான மருத்துவர்களை தேவையின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கின்றார்கள்.
சங்கானை மருத்துவமனை ஏ தரம் வாய்ந்தது. பொதுவாக இந்தத் தரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு 9 மருத்துவர்கள் கடமையில் இருக்க வேண்டும். ஆனால் மருத்துவமனையில் ஐந்து மருத்துவர்களே கடமையில் உள்ளனர். அவர்களிலும் ஒருவர் விடுமுறையில் சென்றுவிட்டார். தற்போது இருக்கின்ற நான்கு மருத்துவர்களே கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் பொதுவாகவே எமது மருத்துவமனைக்கு மொத்தமாக 100 பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 50 வரையான பணியாளர்ளே கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனைத்து தேவைகளும் நிறைவு செய்யப்படுகின்றன. எமது மருத்துவமனையில் பரிசோதனை கூடம் இருக்கின்ற போதிலும் அதற்கான ஆளணி இல்லாமையால் பரிசோதனைகளை வெளியிலேயே செய்ய வேண்டிய நிலமையும் காணப்படுகின்றது. என்று சங்கானை மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|