இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்துவதனாலேயே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்

Saturday, May 7th, 2016

தமிழக மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்றதாலேயே இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்படுவதாக, இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய இந்திய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வீ.கே.சிங் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இழுவைப்படகுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இதனை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது முக்கியமானதாகும். ஆனால் இது தொடர்பில் 3 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள போதும், இதுவரையில் மீனவர்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: