நாட்டில் புகையிரத விபத்துகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை !

Saturday, September 29th, 2018

 

நாட்டில் புகையிரத விபத்துகள் அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் புகையிரதத்தில் மோதி 241 பேர் உயிரிழந்துள்ளதாக சபைத் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

இந்த புகையிரத விபத்துகளைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு நவீன முறைகளைக் கையாளவுளதாக தெரிவிவிக்கப்படுகின்றது.

Related posts: