இலங்கை – அமெரிக்கா முக்கிய கலந்துரையாடல்!

Saturday, June 16th, 2018

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளும் கலந்துரையாடியுள்ளன.
அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் பிரதித் துணை செயலாளர் ரொபட் கம்ரொத், நிதி இராஜாங்க அமைச்சர் ஹெரான் விக்கிரமரட்னவை சந்தித்தபோது குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட உள்ளூர் வர்த்தகத் தலைவர்களையும், அமெரிக்க அதிகாரி சந்தித்து வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

Related posts: