வேட்புமனுத் தாக்கல் இன்று!

Monday, October 7th, 2019


2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று இடம்பெறவுள்ளது. காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை நேற்று நண்பகலுடன் நிறைவடைந்தது.

நாட்டின் மொத்த மக்கள் எண்ணிக்கை 21மில்லியன். இவர்களுள்ள 15.6 மில்லியன் வாக்காளர்கள் இந்தத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 5ஆம் திகதி மாலை வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பணிப்பாளர் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார்.

தேர்தல் வரலாற்றில் முதல்துறையாக இலங்கை விமானப்படை தேர்தல் அலுவலகப்பகுதியில் விமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. ஆளில்லா விமான drone செயற்பாடுகளை விமானப்படை கண்காணிக்கும். அன்றைய தினம் ராஜகிரிய பிரதேசத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பாதுகாப்பும் பலபபடுத்தப்படவுள்ளது.பொலிஸ் விசேட அதிரடைப்படை அடங்களாக 1700 பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

Related posts: