வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வழங்கியமை பாராட்டத் தக்கது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கூற்றுக்களை வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரச்சார பதாதைகளையும் பெனர்களையும் அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொண்டோம். அவை அகற்றப்படா விட்டால் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவற்றை அகற்றுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
இலங்கை இந்திய மீனவர் விவகாரம் : 3ஆவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில்!
சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!
இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்...
|
|