வெளியாகியுள்ளது விசேட வர்த்தமானி!

Thursday, October 24th, 2019


பொதுமக்கள் மத்தியில் அமைதியை முன்னெடுப்பதற்காக வரையறுத்து குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் முப்படையை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் நேற்றைய தினம் அமுலுக்கு வரும் வகையில் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொமும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரேலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தேசிய கரையோரத்தில் வரையுறுத்து குறிப்பிடப்பட்ட பிரதேசங்களுக்கு உட்பட்டதாக இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கண்டி, மாத்தளை, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம். பொலநறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களிலும் பொது மக்களின் சேவைகளை முன்னெடுப்பதற்காக வரையுறுத்து குறிப்பிடப்பட்ட பிரதேசங்களுக்கு உட்பட்டதாக சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: