வெளிநாட்டு விமானங்கள் உள்நாட்டு சேவையிலும் ஈடுபடும் – அனுமதி கொடுத்தது இலங்கை!

Thursday, October 3rd, 2019


உள்நாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சேவைகளை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

தற்போதுள்ள இருதரப்பு உடன்பாடுகளின் கீழ் இலங்கைக்கான சேவைகளில் ஈடுபடும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள், உள்நாட்டு விமான நிலையங்களுக்கு போக்குவரத்தை மேற்கொள்ள முடியாது.

எனினும், வெளிநாட்டு விமான நிறுவனங்கள், உள்நாட்டு விமான நிலையங்களுக்கு சேவையை நடத்துவதற்கு ஒரு ஆண்டு செயற்பாட்டு அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம், மத்தல அனைத்துலக விமான நிலையங்கள், மட்டக்களப்பு, இரத்மலானை விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமான நிலையங்கள் சேவையில் ஈடுபட முடியும். சிறிய விமானங்களைப் பயன்படுத்தி இந்திய விமான நிறுவனங்கள் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கிறது. இந்த நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் அனுமதி பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எடுக்கப்பட்டுள்ள இம்முடிவினால் பயணிகளின் போக்குவரத்து நேரங்கள் மீதப்படுத்தப்படுவதுடன், வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: