வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் தற்போது நாடு உள்ளது – கோட்டாபய ராஜபக்ஷ!
Sunday, September 8th, 2019மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நாட்டின் உள்ள மிக முக்கியமான பொருளாதார மையங்கள் அந்நியப்படுத்தவில்லை என பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பகுதியில் நடைபெற்ற மஹா ஜன எக்சத் பெரமுண கட்சியின் சம்மேளன கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடு தற்போது பல்வேறு வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளதாகவும், அவற்றிலிருந்து விடுவித்து பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
Related posts:
ஊரடங்கு உத்தரவின் போது பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் விடுவிக்க தீர்மானம்!
பயணக்கட்டுப்பாடு தொடர்பில் நாளை தீர்மானம் - இராணுவத் தளபதி!
வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரின் உதவியில் கட்டப்பட்ட யாழ் மாவட்ட கட்டளை த...
|
|