வெளிநாட்டவர்களின் வருகை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!

Friday, September 6th, 2019


குடாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை. எனினும் இம்முறை நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த திருவிழாவின் போது பெருமளவு வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் தமிழர் பாரம்பரிய உடைகளுடன் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கிருந்து மன்னார் சென்று அதனூடாக கல்பிட்டிய நோக்கி செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: