வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகல்வகளை திரட்டும் தேர்தல் ஆணையகம்!

2018 ஆம் ஆண்டு தேர்தல் வாக்களார் இடாப்பில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகல்வகளை தேர்தல் ஆணையகம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 க்கும் திகதிக்குப் பின்னர் உயிரிழந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்றவர்கள் தொடர்பான விபரங்களை ஒவ்வொரு கிராம சேவையாளர்களும் சேமித்து அது குறித்த தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் மேற்படி தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையகம் அறிவுறுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!
நாட்டில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட மாற்றம்!
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை நிறுத்துங்கள் - பொலிஸ் மா அதிபர் அவசர உ...
|
|